Tazhal Media – தழல் மீடியா

/ Sep 27, 2026
Latest News
tms

பாரா பேட்மிண்டன் வீரர் மீது தடை இல்லை – MPM விளக்கம்

படம்: ஊடகம்

கோலாலம்பூர், 23 செப். – பாரா பேட்மிண்டன் வீரர் மீது எந்த இடைநீக்கம் விதிக்கப்படவில்லை என மலேசியா பாராலிம்பிக் கவுன்சில் (MPM) தெளிவுபடுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்த அந்த அமைப்பு, சம்பந்தப்பட்ட வீரரின் விளையாட்டு உரிமைகள் தொடர்ந்து செல்லுபடியாக உள்ளன என தெரிவித்தது. மேலும், தவறான புரிதல்கள் ஏற்படாதவாறு பொதுமக்கள் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே நம்ப வேண்டுமென MPM வலியுறுத்தியது.

“அந்த வீரருக்கு எதிராக எந்தத் தடை அல்லது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் தொடர்ந்தும் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தலாம்,” என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வீரர் மற்றும் அவரது குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களால் பாதிக்கப்படாதிருக்க வேண்டும் என்றும், விளையாட்டு வீரர்களின் மன உறுதியைக் காக்க ரசிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் MPM வேண்டுகோள் விடுத்துள்ளது.

-யாழினி வீரா

Scroll to Top