
பல இசை நிகழ்சிகளுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் உலகளவில் பேர் போன மோஜோ ப்ரோஜெக்ட்ஸ் நிறுவனம் இப்பொழுது பிரவீன் குமாரின் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையை ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி 10 மேடை நகைச்சுவை கலைஞர்களில் ஒருவராக பிரவீன் குமாரை 2011 ஆம் ஆண்டு The Times of India அவரை தேர்ந்தெடுத்தது – அதன்பிறகு பிறகு 1500 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், 10 மில்லியனுக்கும் மேற்பட்ட YouTube பார்வைகள், மற்றும் Amazon Prime நகைச்சுவை ஸ்பெஷல் வரை சென்றுவிட்டார்.
மற்றவர்களின் மனதை புண்படாத நக்கல் கலந்த நகைச்சுவை, சிரியர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ரசிக்கும்படியான நகைச்சுவை துணுக்குகள் – இதுதான் பிரவீன் குமாரின் தனிச்சிறப்பு! கார்ப்பரேட் உலகில் பிரபலமான இவர், இதுவரை 6 தனிநபர் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
இப்போது, அவருடைய 8-வது புதிய ஸ்பெஷல் – மிகவும் படைப்பூக்கத்துடன் பெயரிடப்பட்ட “8” நிகழ்ச்சியுடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். (ஏனென்றால் “7+1” என்று பெயரிடுவது சரியாக இருக்காது என்று நினைத்தார்!).
📅 நாள்: 14 ஜூன் 2025
📍 இடம்: Omnia Auditorium, Menara BAC, PJ
🎟️ டிக்கெட் விற்பனை: 6 மார்ச் 2025 முதல் – www.excitix.com.my
இந்த நிகழ்ச்சியை தவறவிடாமல் பார்க்க காலண்டரில் குறியிடுங்கள், அலாரம் வையுங்கள் – வேண்டுமானால் டாட்டூ போட்டுக்கொள்ளுங்கள்! ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் உறுதி செய்யுங்கள் – இதைத் தவறவிட வேண்டாம்!