
பாத்தாங் காலி, 21 பிப்ரவரி — பாத்தாங் காலி அருகே உள்ள மச்ஜித் ஜமேக் சுங்கை மாசின் பள்ளிவாசலில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
CCTV காட்சிகள் மூலம், காலை 6.41 மணிக்கு குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர், பள்ளிவாசல் பெண்கள் பிரிவுக்குள் நுழைந்து, பின்னால் இருந்த சிறுமியை அணுகினார்.
சந்தேக நபர் சிறுமியை திடீரென அணைத்து தூக்கி வெளியே அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். அங்கிருந்தவர்கள் தொழுகையில் இருந்ததால், அவரின் செயல்களை உடனடியாகக் கவனிக்க முடியவில்லை.
சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவியது. சந்தேக நபர் வெள்ளை தொப்பி, மஞ்சள்-பச்சை கோடு சட்டை, மற்றும் கருப்பு பேண்ட அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
சமூக வலைதள பயனர் ஒருவரின் தகவலின்படி, நபர் அவரது இரண்டாம் நிலை உறவினரின் குழந்தையெனவும், அவர் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் சந்தேக நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-யாழினி வீரா