
கோலாலம்பூர், 28 ஜனவரி — சபா மாநில மருத்துவமனையில் இனரீதியான பகடிவதை மற்றும் நச்சு வேலை கலாச்சாரம் தொடர்பான புகார்களை சுகாதார அமைச்சு பெற்றிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் செய்தி ஊடகங்களில் வெளிப்பட்டது.
சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்த புகாரின் மீது மேலான விசாரணை செய்ய உயர்நெறி பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் தேவையான தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.
மேலும், விசாரணைக்கு உதவுவதற்காக MyHelp அமைப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக புகார்களை அளிக்க சம்பந்தப்பட்ட தரப்பினரை கேட்டுக் கொண்டுள்ளது. “சுகாதார அமைச்சில் எந்தவிதமான பகடிவதைக்கும் இடமில்லை. இது பாதுகாப்பான மற்றும் நியாயமான வேலை சூழலை உருவாக்கும் அடிப்படை நோக்கத்திற்கு முரணாகும்,” என்று அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சு பகடிவதை விவகாரங்களில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கடைப்பிடிக்குமெனவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கைகள், வேலைக்குச் சூழலில் நியாயமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தவும், பகடிவதை போன்ற செயல்களால் பாதிக்கப்படும் அனைவருக்கும் நேர்மையான நியாயத்தை வழங்கவும், முக்கியமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
-வீரா இளங்கோவன்