Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

விளையாட்டு பூங்காவில் நச்சு உணவுவால் 800க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவு

கோலாலம்பூர், 5 நவ. – நாட்டின் பிரபலமான ஒரு விளையாட்டு பூங்காவில் உணவு விஷச்சம்பவம் நிகழ்ந்து, 800க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்திற்குப் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, முதற்கட்ட ஆய்வில் பூங்காவின் உணவகத்தில் வழங்கப்பட்ட சில உணவுப் பொருட்களில்தான் விஷத்தன்மை காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட உணவகம் உடனடியாக மூடப்பட்டு, மாதிரிகள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், உணவு தயாரிப்பில் சுகாதார விதிகள் பின்பற்றப்பட்டனவா என சரிபார்ப்பு நடைபெறுவதாகவும் அதிகாரிகள் கூறினர். மேலும், பாதிக்கப்பட்டோரின் நிலை பெரும்பாலும் நிலைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மக்கள் பொதுவாக வெளியிடங்களில் உணவு உண்ணும் போது சுகாதார சான்றிதழ் பெற்ற இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக அமைப்புகள் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க உணவு விற்பனையாளர்களுக்கு கடுமையான கண்காணிப்பு தேவை என வலியுறுத்துகின்றன. பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அரசு மற்றும் தொழில்முனைவோரின் பொறுப்பாகும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கவலைக்குறியாக மாறியுள்ளது. உணவுப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பது அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

– யாழினி வீரா

Scroll to Top