Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பெல்ஜியத்தில் இரண்டு நாள் பணிச்சுற்றுப்பயணம்

பெல்ஜியம், 19-ஜனவரி, — மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்களுடன் சந்திப்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை இரவு (மலேசிய நேரப்படி இரவு 9 மணி) பல்ஜியத்திற்கு வருகை தந்தார். லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரஸ்சல்ஸ் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, மலேசிய தூதர் டத்தோ முகமத் காளிட் அபாசி அப்துல் ரசாக் மற்றும் பல்ஜியம் துணை மேலமைப்பு அலுவலர் அலெய்ன் ஷ்மிட்ஸ் வரவேற்றனர்.

இந்த பயணத்தில், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ ஜாப்ருல் துங்கு அப்துல் அசிஸ், உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்பாய் அப்துல் கதிர் மற்றும் தோட்டம் மற்றும் மூலப்பொருள் அமைச்சர் டத்தோ செரி ஜொஹாரி அப்துல் கனி ஆகியோரும் பிரதமருடன் செல்கின்றனர்.

பல்ஜியம்-மலேசியா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களை மீண்டும் தொடங்குவது தொடர்பான அறிவிப்புகள் இந்த பயணத்தின் முக்கிய குறிக்கோளாகக் காணப்படுகிறது. குறிப்பாக, 2010 இல் துவங்கி 2012 இல் நிறுத்தப்பட்ட மலேசிய-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

பிரஸ்சல்ஸில் மலேசிய மக்கள் குழுவைச் சந்தித்து உரையாற்றும் அன்வார், மாறுநாள் பிரதமர் அலெக்சாண்டர் டே க்ரூவுடன் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்புகளை விரிவாக்கவுள்ளார்.
தனது பயணத்தை முடிவுபடுத்தும் விதமாக, அன்வார் பிரஜெஸில் உள்ள College of Europe இல் “வெளிப்படையான உலகத்தை இணைத்தல்” என்ற தலைப்பில் முக்கிய உரையாற்ற உள்ளார்.

Scroll to Top