Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

சிலாங்கூரில் பெண்கள் குழு தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி கடன் உதவி

Picture: SK

ஷா ஆலம், மார்ச் 5: சிறு குழுவாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) 50,000 வெள்ளி வரை மூலதன கடனுதவி வழங்குகிறது.

இந்த திட்டம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 18 முதல் 65 வயதுக்குள் உள்ள பெண்கள் சிறு தொழில் தொடங்குவதற்காக டாருல் ஏஹ்சான் வணிகக் கடனுதவித் திட்டம் (நாடி) மூலம் வழங்கப்படுவதாக ஹிஜ்ரா அறிவித்துள்ளது.

நிதியுதவிக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் https://mikrokredit.selangor.gov.my என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், அதற்கான பிரசுரத்தின் QR குறியீட்டை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது அருகிலுள்ள ஹிஜ்ரா கிளையை தொடர்பு கொள்ளலாம் என்று ஹிஜ்ரா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

தொழில்முனைவோருக்கான புதிய டிஜிட்டல் திட்டம்

வணிக முறைகளை இன்மையிலிருந்து (offline) இலக்கவியலுக்கு (online) மாற்ற உதவுவதற்காக கோ டிஜிட்டல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தயாரிப்பு மற்றும் சேவைகளை சந்தைப்படுத்துவதற்கான திறனை அதிகரிக்க டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் உதவுகிறது.

வணிகத்தை இணையவழியில் விற்கும் வாய்ப்பை மேம்படுத்தி லாபத்தை அதிகரிக்க இந்த திட்டம் முக்கியமானது. மேலும் விவரங்களுக்கு www.hijrahselangor.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.

100 கோடி வெள்ளி இலக்கு

ஹிஜ்ரா சிலாங்கூரின் ஒன்பதாம் ஆண்டு நிறைவையொட்டி, இந்த ஆண்டில் மட்டும் தொழில்முனைவோருக்கு 100 கோடி வெள்ளி கடனுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

-கவியா கிருஷ்ணன்

Scroll to Top