
மலாக்கா, 31 அக். – தங்கள் கீழ் பணியாற்றும் ஒரு இராணுவ அதிகாரியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இரு இராணுவ கேப்டன்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கேப்டன் மொஹமட் ரிதுவான் பின் மொஹமட் நூர் (37) மற்றும் கேப்டன் முகமது அஸ்மி பின் முகமது ஸுக்கி (37) ஆவர். அவர்கள் இருவரும் Seksyen 323 Kanun Keseksaan இணைப்பு 34 அதாவது “கூட்டு நோக்கம்” கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.
வழக்குப்படி, 2024 பிப்ரவரி 26 அன்று காலை 10.15 மணிக்கு Sungai Udang இராணுவ முகாமில் உள்ள விளையாட்டு மையத்தில், அவர்கள் இருவரும் ஒரு கீழ் அதிகாரியான Leftenan Muda Muhammad Hazim பின் Mohd Azahar என்பவரை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அதிகாரி முகத்தில் மற்றும் உடலில் காயம் அடைந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குற்றவாளிகள் மீது தாக்குதல் நோக்கத்துடன் உடல் வன்முறை செய்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் குற்றவாளிகள் இருவரும் குற்றத்தை மறுத்தனர். வழக்கறிஞர் RM5,000 ஜாமீனை ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்க நீதிமன்றத்தைக் கோரிய நிலையில், நீதிபதி Azrul Darus அவர்கள் அந்த கோரிக்கையை ஏற்று ஜாமீன் வழங்கி, வழக்கை 2025 டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதேவேளை, இராணுவ தலைமையகம் சம்பவத்தை மிகுந்த முக்கியத்துடன் எடுத்துக்கொண்டு, தன்னுடைய உள்நிலை ஒழுங்கு நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-யாழினி வீரா



