
நம் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேற வேண்டும் என்பது எல்லோரின் கனவு. அந்த முன்னேற்றத்தை அடைய, நாம் செய்கிற வேலைக்குப் போக தொழிலிலும் நமக்கு வளர்ச்சி தேவைப்படுகிறது. இத்தகைய வளர்ச்சி ஏற்பட, ஆன்மீக வழிபாடும் முக்கிய பங்கு வகிக்கிறது என நம்பப்படுகிறது. குறிப்பாக முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை வழிபடுவதால் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.
முருகனை வழிபட சிறந்த நாட்கள் செவ்வாய்க்கிழமைகள், சஷ்டி திதி மற்றும் கிருத்திகை நட்சத்திரம் உள்ள தினங்கள். அந்த நாட்களில் வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இது ஆலயத்திலும் வீடுகளிலும் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல், செவ்வாய்க்கிழமைகளில் “செவ்வாய் ஹோரை” நேரத்தில் நெய் தீபம் ஏற்றி, “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை கூறினால், முருகப்பெருமானின் அருள் விரைவாக கிடைக்கும் என நம்பப்படுகிறது.
செவ்வாய் ஹோரை காலங்கள்: காலை 6–7 மணி, மதியம் 1–2 மணி, இரவு 8–9 மணி. இந்த நேரங்களில் பூஜை அறையில் முருக படத்திற்கு முன்னால் கிழக்கு நோக்கி நெய் தீபம் ஏற்றி, முழு மனதுடன் மந்திரம் கூற வேண்டும்.
இந்த எளிய வழிபாட்டு முறையை கடைபிடிப்பவர்கள், பொருளாதாரமாகவும் வாழ்க்கை தரத்திலும் முன்னேறுவார்கள் என கூறப்படுகிறது.