
பினாங்கு, 21 ஜனவரி — மதிக தேசியத் தலைவரும், மலேசிய திராவிடர் கழக முன்னோடி தலைவருமான டத்தோ ச.த.அண்ணாமலை ( வயது 78 ) 20-01-2025 திங்கட்கிழமை மாலை மணி 7:25 க்கு, புக்கிட் மெர்த்தாஜம் மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தியை இதன்வழித் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாறது நல்லுடல் எண், 4-19 blok B Pangsapuri widuri jalan cempa butterworth எங்கள் இல்லத்தில் உறவினர், கழகத் தோழர்கள், நண்பர்களின் இறுதி மரியாதை அஞ்சலிக்குப் பின் 22-01-2025 புதன்கிழமை மதியம் மணி 12:00 மணிக்கு மேல் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தி சுயமரியாதை முறைப்படி மலேசியத் திராவிடர் கழம், பினாங்கு திராவிடர் கழகம், மாக் மண்டின் திராவிடர் கழக ஏற்பாட்டில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, பினாங்கு, மத்திய செபராங் பிறை, புக்கிட் மெர்த்தாஜம், பிராப்பிட் மின் சுடலையில் தகனம் செய்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்புக்கு மகன் அ.குணசேகர் +60 10-561 3904, பொன்.பொன்வாசகம் +60 12-358 6023 ( கழகப் பொதுச் செயலர்) மு.நாராயணசாமி, +60 16-454 3394, செ.குணாளன் +60134853128.
-வீரா இளங்கோவன்