
கோலாலம்பூர், 20 ஜூன்: மலேசிய திரைப்பட விநியோகத் துறையில் முன்னணி நிறுவனமான Five Star Trading, இப்போது தயாரிப்புத் துறையிலும் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. DSG Creations மற்றும் EVORA Entertainment ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள “மிருகசிரீஷம்: தி ஓரியன்” என்ற திரைப்படம், இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு முயற்சியாகத் திகழ்கிறது.
மலேசியாவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், நகைச்சுவை, உணர்ச்சி, அதிரடி, திகில் மற்றும் குடும்பம் சார்ந்த மன உளைச்சல்களைச் சினிமா வடிவில் தந்திரமாக கட்டமைக்கிறது. இயக்குநர் விஜய் கணேஷ் இந்த படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அவருடன் ஜோஷுவா சஷிகுமார், ஜேகன் சண்முகம், நிர்மலா தர்மராஜன், குமரி மற்றும் கொமலா நாயுடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஷேன் எக்ஸ்ட்ரீம் இசையை உருவாக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் பிரம்மாண்ட துவக்க விழா ஜூன் 17 அன்று PJ State இல் உள்ள LFS திரையரங்கில் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், ஊடகங்கள், மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் நேரடியாக சந்திக்கும் நிகழ்வும், பின்னர் செய்தியாளர்களுக்கான கேள்வி-பதில் அமர்வும் நடைபெற்றது. திரைபடம் இரவு 9:15 மணிக்கு திரையிடப்பட்டது.
Five Star Trading-இன் பொதுமுகாமையாளர் டாக்டர் சாய் சுதன் கிருஷ்ணன் கூறினார்: “இந்த திரை உலகப் பயணம் மலேசிய உள்ளூர் திறமைகளை ஊக்குவிக்கவும், மாறுபட்ட கதைகளை வெளிக்கொணரவும் செய்தியாயுள்ளது.”
2017-ல் எழுதப்பட்டிருந்த இந்தத் திரைக்கதை, பல ஆண்டுகளுக்குப் பிறகு Five Star Trading-இன் ஒத்துழைப்பால் உருவானது. ஜூன் 19 முதல் மலேசியா முழுவதும் வெளியிடப்படும் இந்தப் படம், பலமொழி பார்வையாளர்களையும் எட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முயற்சி, மலேசிய திரையுலகிற்கு ஒரு புதிய திகிலைத் தரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-யாழினி வீரா



