
கோலாலம்பூர், மே 1: ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன், “Tourist Family” திரைப்படம் குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை ரசித்த அனுபவத்தை முகநூலில் பகிர்ந்த அவர், “இது ஒரு தரமான திரைப்படம். இரண்டு மணி நேரம் எப்படி சென்றது என்று கூட தெரியவில்லை. காதல், கருணை, குடும்பம் என அனைத்தையும் நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தும் கதை இது,” என குறிப்பிட்டார்.
தெளிவான திரைக்கதை, உணர்ச்சி நிரம்பிய காட்சிகள் மற்றும் குடும்பத்தோடு பார்த்து மகிழக்கூடிய தரமான உரையாடல்கள் ஆகியவை இந்த படத்தின் முக்கிய பலமாக உள்ளன.

“நீண்ட நாட்களுக்குப் பின் சிரித்து மகிழும்படி செய்த திரைப்படம் இது. Tourist Family ஒரு அனைத்து தரப்பு மக்களும் கண்டிப்பாகப் பார்த்து ரசிக்க வேண்டிய படம்,” என சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இப்படம் தற்போது சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
-யாழினி வீரா



