
மலேசிய தமிழ் சினிமாவின் புதிய பரிணாமமாக, “சுட்டா தல எனக்கு (STE)” திரைப்படம் ரசிகர்களை மகிழ்ச்சியூட்டும் வண்ணம் வரும் மே மாதத்தில் திரையரங்குகளை அலங்கரிக்க வருகிறது. சாய் நந்தினி மூவி வேர்ல்டின் தயாரிப்பில், டாக்டர் இலட்சப் பிரபு அவர்களின் மாபெரும் முயற்சியாக உருவாகியுள்ள இப்படம், ஆக்க்ஷன் மற்றும் காமெடியின் அதிரடியான கலவையாக இருக்கும். இது மலேசிய தமிழ் திரை உலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு முக்கிய திரைப்படமாக உயர்ந்துள்ளது.
இயக்குனர் எடி ஷரிசான், மலேசியப் படங்களுக்கான பிரபல ஆக்க்ஷன் காட்சிகளை உருவாக்கிய தனது திறமையை, STE மூலம் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்துள்ளார். இதனால் ரசிகர்களுக்குப் புதிய அனுபவம் கிடைக்கும். இது மட்டுமல்ல, இரண்டு மணி நேரப் பாத்திரத்தில், காமெடி மற்றும் ஆக்க்ஷன் காட்சிகளின் அதிரடி அனுபவம், “ஜில் ஜங் ஜக்” மற்றும் “டாக்டர்” போன்ற படங்களை விரும்பியவர்களுக்கு STE-யின் தனித்துவத்தை உணர்த்தும்.
தனேஷ் பிரபு, தனது இயக்கத்திற்கான வித்யாசமான கதைகளத்தால் பிரபலமானவர். அவரின் முன்னோடியான படங்கள் “பரமபதம்” மற்றும் “அஃறிணை” இரண்டுமே வெற்றிபெற்றது. இப்போது, இவர் காமெடி மற்றும் ஆக்க்ஷன் கலந்த புதிய சிந்தனையை மலேசிய திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். இது STE-யின் பிரமாண்டத்தையும், சிறப்பையும் உயர்த்துகிறது.
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக விக்னேஷ் பிரபு நடித்துள்ள “சமுத்திரம்” என்ற மாஃபியா கதாபாத்திரம் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும். இவருடன் இணைந்து பல திறமையான நடிகர்கள், இசையமைப்பாளர் எம். ஜகதீஸின் திகைப்பூட்டும் பின்னணி இசையுடன், படத்தை முழுமையாக மலேசிய ரசிகர்களுக்கு படைக்க காத்திருகின்றனர்.
இந்த திரைப்படம் முழு குடும்பத்துடன் பார்க்க ஏற்றதாகும். மலேசிய ரசிகர்களின் கண்களில் மலேசிய சினிமாவின் புதிய பரிணாமத்தை காணச் செய்யும் “சுட்டா தல எனக்கு” டிரெய்லரை யூடியூப் PU4LYF சேனலில் பாருங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் புதுமையான திரைக்கதையின் அனுபவத்தை இழக்காமல் கண்டு மகிழுங்கள்! டிரெய்லர் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது!
செய்தி:- வீரா இளங்கோவன்