
நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் டைட்டில் “பராசக்தி” என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இரு படக்குழுக்களும் தங்களது உரிமையை உறுதி செய்யும் வகையில் ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் சிவகார்த்திகேயன் படத்திற்கு “பராசக்தி” என்ற பெயரை பயன்படுத்த விஜய் ஆண்டனி படக்குழு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், இருதரப்புகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கான டைட்டில் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் இப்படத்திற்கு ஏற்கனவே “சக்தி திருமகன்” என்ற பெயர் தேர்வாகியுள்ள நிலையில், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் “பராசக்தி” என்ற பெயரை வைத்திருக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், தெலுங்கு பதிப்பிற்கு மட்டும் புதிய பெயர் சூட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதன்மூலம், “பராசக்தி” என்ற பெயரால் ஏற்பட்ட குழப்பம் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது. இதற்கிடையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் புதிய வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
-யாழினி வீரா