Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

ASEAN25: ஆசியக் கூட்டமைப்பில் (ASEAN) ஒருங்கிணைப்பையும் பொருளாதார வளத்தை அதிகரிப்பையும் குறித்து தலைவர்கள் ஆலோசித்தனர்

கோலாலம்பூர், 25 அக். – ASEAN 25 உச்சி மாநாட்டின் முன்னோட்டமாக நடைபெற்ற உயர்நிலை அமைச்சரவை கூட்டத்தில், உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் பிராந்திய ஒருங்கிணைப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்படுத்தும் நோக்கில் தீவிரமாக விவாதித்தனர். மலேசியா வெளியுறவுத்துறை (Wisma Putra) வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆலோசனையின் முக்கிய குறிக்கோள் “ASEAN நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையையும் பொருளாதார இணைப்பையும் மேலும் வலுப்படுத்தி, உலகளாவிய சவால்களுக்கு ஒருங்கிணைந்த பதிலை உருவாக்குதல்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, உலக பொருளாதாரம் தற்போது பல்வேறு அரசியல், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதால், ASEAN பிராந்தியம் உறுதியான மற்றும் தன்னிறைவு பெற்ற பொருளாதார அமைப்பை உருவாக்குவது அவசியமாகிறது. இதற்காக உறுப்பினர் நாடுகள் இடையேயான வணிக, முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கு பல புதிய திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள், பிராந்திய இணைப்பை மேம்படுத்தும் திட்டங்களையும் (connectivity), புதிய பசுமை ஆற்றல் முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தங்கள் போன்ற எதிர்கால வாய்ப்புகளையும் விரிவாக ஆராய்ந்தனர். மலேசியா, தற்போதைய ASEAN தலைமை நாடாக, பிராந்திய நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கியப் பொறுப்பை வகிக்கிறது.

இதற்கிடையில், மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம், “ASEAN என்பது வெறும் பொருளாதார கூட்டமைப்பு அல்ல, அது மனித ஒற்றுமை, பகிர்ந்த நம்பிக்கை மற்றும் நிலையான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சமூகமாகும்” என்று வலியுறுத்தினார்.

இந்த கூட்டம் 26 முதல் 28 அக்டோபர் வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. பல உலகத் தலைவர்களும் அதில் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின் முடிவில் ASEAN பிராந்திய பொருளாதாரத்திற்கான புதிய ஒருங்கிணைந்த செயல் திட்டம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-யாழினி வீரா

Scroll to Top