Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

பெரிகத்தான் அடுத்த தலைவரை தேடுகிறது – தேர்தலுக்குள் மாற்றம்?

படம்:ஊடகம்

கோலாலம்பூர், 24 ஜூன்: 2023 ஆம் ஆண்டு பிரதமர் அன்வார் இப்ராகிமின் நம்பிக்கைக் கூட்டணியை அகற்றும் முயற்சியில் தோல்வியடைந்த பெரிகத்தான் நே‌‌ஷனல் (PN) கூட்டணி, தற்போது அடுத்த பொதுத் தேர்தலுக்கான தலைமை மாற்றத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

தற்போது நாட்டின் நாடாளுமன்றத் தவணையின் பாதிப்பகுதியை எட்டியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் புத்ராஜெயாவை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன. பெரிகத்தானை முன்னிலையில் நடத்தி வரும் முன்னாள் பிரதமர் தானும் பெர்சாத்து தலைவர் திருமிகு முஹிடின் யாசின், அடுத்த தலைமுறை அமைப்பை தீர்மானிக்க முக்கிய சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

பாஸ் கட்சி நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளதோடு, அதன் 77 வயது ஆன்மீகத் தலைவர் ஹாடி அவாங், தலைமைத்துவத்தில் மாற்றம் குறித்து சிந்தித்து வருகிறார். செப்டம்பரில் கட்சித் தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம், பெர்சாத்து கட்சிக்குள் துணைத் தலைவர் ஹம்சா சைனுடின் மற்றும் முக்கிய உறுப்பினர் அஸ்மின் அலி ஆகியோருக்கு இடையில் தலைமைப் பதவிக்கான போட்டி உருவாகியுள்ளது.

முஹிடின், கட்சியின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் 2027 வரை சிறந்த அணியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். அவர், 16வது பொதுத் தேர்தல் வரை தலைவராக தொடருவதாகவும் உறுதி தெரிவித்தார்.

PN கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பெர்சாத்துவிலிருந்துதான் வர வேண்டும் என்று பாஸ் உட்பட கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

-யாழினி வீரா

Scroll to Top