
மதுரை, 2 மே: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் பிரபல நடிகரான விஜய், தனது ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் ஒரு முக்கிய அறிவுரையுடன் வெளியே வந்துள்ளார். ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக மதுரை புறப்பட்ட விஜய், பயணத்திற்கு முன் சென்னை விமான நிலையத்தில் பேசியார்.
விஜயின் மதுரை வருகையை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்தில் அதிகாலை முதல் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பெருமளவில் கூடினர். இது அந்த பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விஜய் அனைவரிடமும் நேரடியாக மனம்வைத்து கூறியதாவது:
“இன்று நான் ஒரு திரைப்படத்தின் வேலைக்காக கொடைக்கானலுக்கு புறப்படுகிறேன். தயவுசெய்து யாரும் எனது வாகனத்திற்குப் பின்னால் பின்தொடர வேண்டாம். இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் ஆபத்தான முறையில் செல்ல வேண்டாம். இது என் மனதைப் பதற்றப்படுத்துகிறது,” எனவும், “மதுரை மக்களின் அன்பிற்கு கோடான கோடி நன்றிகள். கட்சி சார்பாக வேறொரு சந்தர்ப்பத்தில் அனைவரையும் நேரில் சந்திப்பேன்,” என்றும் தெரிவித்தார்.
மேலும், மே தினத்தையொட்டி அனைத்து தொழிலாளர்களுக்கும் விழிப்புணர்வுடன் வாழ்த்துகளை தெரிவித்த விஜய், மதுரை விமான நிலையத்தில் இதனைச் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்திலேயே இச்செய்தியைக் கூறியதாக தெரிவித்தார்.
விஜயின் இந்த நேர்த்தியான அறிவுரை, ரசிகர்களுக்குள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது, மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விடயம்!
-ஸ்ரீ