Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

மலாக்காவில் தேசிய TVET நாள் 2025 கொண்டாட்டம்

PICTURE:BERNAMA

மலாக்கா 11 ஜூன்: மலாக்கா பன்னாட்டு வர்த்தக மையம் (MITC), ஆயர் கெரோவில் நடைபெறும் தேசிய தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி (TVET) நாள் 2025 கொண்டாட்டம் நேற்று மிகச் சிறப்பாக தொடங்கியது. இது மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

மலாக்கா பெர்சிபடானின் பேச்சாளர் தெரிவித்ததாவது, பல்வேறு அமைச்சுகளும் தனியார் நிறுவனங்களும் தங்களது கண்காட்சி களங்களைக் கவர்ச்சிகரமாக அலங்கரித்து, பொதுமக்கள் விரும்பும் தகவல்களை எளிதில் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

TVET நாளுக்கான நிகழ்ச்சிகள் நான்கு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

  1. TVET கண்காட்சி, தொழில் முயற்சி, தொழில்துறை ஒத்துழைப்பு, மற்றும் மறுஅறிவியல் கலாசார நிகழ்வுகள் ஆகியவை உள்ளடக்கிய முதல் பகுதி,
  2. TVET மாநாடு – ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் கருத்தரங்குகள்,
  3. வேலைவாய்ப்பு கார்னிவல் – நேரடி நேர்முகத் தேர்வுகள், MyFutureJob,
  4. திறன் போட்டிகள் – WorldSkills ASEAN Manila 2025 ஆகியவற்றுக்கான முன்தேர்வு மற்றும் டிரோன் ரேசிங் போன்ற Try-A-Skill போட்டிகள்.

9 துறைகளில் மொத்தம் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் 5,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. மேலும், RM10,000 பரிசுத்தொகையுடன் e-Sport போட்டி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சி, “TVET – தொழில்முனைவோர்களின் முதன்மைத் தேர்வு” என்ற கருப்பொருளில், எதிர்கால திறமையான தொழிலாளர்களை உருவாக்க அரசின் உறுதியான முயற்சியாகும். 100,000 பேரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

-ஸ்ரீதரன்

Scroll to Top