
அன்ட்டேன்னா என்டேர்டைமண்ட்ஸ் “டிராகன்” திரைப்படத்தை மலேசியாவில் வெளியீடு செய்துள்ளனர். அண்மையில் மலேசிய இலக்கவியல் ஊடகவியளர்களுடன் டிராகன் திரைப்படம் பார்க்க மைபேம் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இலக்கவியல் ஊடகவியாளர்களுடன் “மக்கள் கலைஞர் கவிமாறனும் கலந்துக்கொண்டார். பொழுதுபோக்கு திரைப்படம் ஒரு பரவசமான அனுபவத்தைக் கொடுக்க வேண்டும். அதே சமயம், தேவையற்ற சமூக கருத்துகளை போதிக்காமல், மக்களை மகிழ்விக்கும் விதமாக இருக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களையும் ஒருங்கிணைத்து, ‘டிராகன்’ திரைப்படத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. ‘ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவரிடம் ஏற்பட்ட நம்பிக்கையை ‘டிராகன்’ மேலும் உறுதிப்படுத்துகிறது.

கதை சுருக்கம்:
பள்ளியில் செழிப்பாகத் திகழ்ந்த தனபால் ராகவன் (டி. ராகவன்) பள்ளி முடித்தவுடன், பொறியியல் படிக்கிற மகிழ்ச்சியில் இருக்கிறார். காதல் சொல்லும் போது, தன்னைத்தவிர வேறு ஒருவரை விரும்புவதாக தோழி கூற, ‘நல்ல பையன்’ படையெடுப்பதை முடிவெடுக்கிறார். நண்பன் (விஜே சித்து) பரிந்துரை செய்ய, ‘டிராகன்’ என்ற பெயருடன் புதிய அவதாரத்தை எடுக்கிறார்.
போக்கில், கல்லூரியில் ஏகப்பட்ட அனுபவங்களுக்குப் பிறகு, நேர்மையாக வேலைக்குச் செல்லும் திட்டம் தவறி, போலியான சான்றிதழ்களைத் தயார் செய்து அமெரிக்க ஐடி நிறுவனத்தில் வேலை பெறுகிறார். ஆனால், தொழில் மீது ஆர்வத்தினால், திறமையாக வேலை செய்ய, மூன்றாண்டுகளில் முப்பது லட்சம் சம்பளம் பெறும் நிலைக்கு வருகிறார்.
இந்நிலையில், காதலியின் திருமண நிச்சயதார்த்தம் நடக்க, அதைவிட அதிக சம்பாதிக்க வேண்டும் என்று உறுதி செய்கிறார். ஆனால், பழைய ரகசியம் கல்லூரி முதல்வர் (மிஷ்கின்) மூலம் வெளிவர, வாழ்க்கையில் நெருக்கடி உருவாகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே திரைக்கதை.
திரைப்படத்தின் சிறப்பம்சங்கள்:
இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைப்பு, ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி வேலை, படத்தொகுப்பு அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் பலத்த வெளிச்சம் தருகின்றனர்.

தீர்க்கமான கருத்து:
‘சதுரங்க வேட்டை’ போல போதனையுடன் முடிவடைகின்ற இப்படம், நேர்மையான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சில இடங்களில் வசனங்களில் தேவையற்ற வார்த்தைகள், கவர்ச்சி அம்சங்கள் குறைக்கப்பட்டிருந்தால், முழுமையான குடும்பப் படம் ஆனிருக்கும். அதற்குப் பிறகும், பொழுதுபோக்கை நேசிக்கும் அனைவரும் ரசிக்கக்கூடிய திரைப்படம் தான் ‘டிராகன்’!
-வீரா இளங்கோவன்