Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

தாமான் மிடாவில் தீவிபத்து

படம்:ஊடகம்

கோலாலம்பூர், 11 ஜூன்: கோலாலம்பூர் தாமான் மிடா பகுதியில் ஜூன் 10 (செவ்வாய்) இரவு ஏற்பட்ட ஒரு பெரிய தீவிபத்துக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

பல வீடியோக்களில், தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த போராடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. தீ விபத்து ஏற்பட்ட இடம் ஒரு பூஜை இல்லமாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து சமூக ஊடகங்களில் இரவு 9 மணிக்கு மேல் முதல் பதிவுகள் தோன்றத் தொடங்கின. சம்பவ இடத்திற்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததாக கூறப்படுகிறது.

தீ விபத்து இரவு 10.10 மணிக்கு கட்டுப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயணைப்பு மற்றும் மீட்பு துறையிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்களை பெற தழல் மீடியா ஊடகம் தொடர்பு கொண்டுள்ளது.

இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

-ஸ்ரீ

Scroll to Top