
படம் : முகநூல்
சென்னை, 25 பிப்ரவரி- ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்து மார்ச் 7-ல் வெளியாக இருக்கும் படம், ‘கிங்ஸ்டன்’. இதை, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தும் இருக்கிறார், அவர். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்திருக்கிறார்கள்.
“இது வழக்கமா பார்க்கிற சினிமா இல்லை. ஒரு பெரிய ‘சினிமாடிக் எக்ஸ்பீரியன்ஸை’ கொடுக்கிற படம். ஹாலிவுட்ல வந்திருக்கிற ‘ஹாரிபாட்டர்’ மாதிரி, ‘பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன்ஸ்’ மாதிரியான படம் இது. அவங்க பெரிய பட்ஜெட்ல பிரம்மாண்டமா பண்ணியிருந்தாலும் எங்களுக்குக் கிடைச்சிருக்கிற பட்ஜெட்ல இதுல நாங்க ஒரு புது உலகத்தை உருவாக்கி இருக்கிறோம்”, என்று பகிர்ந்துள்ளார்.
மேலும் கூறுகையில், “இந்தப் படம் மூலமா இந்தியாவுக்கே ஒரு புது ஜானரை அறிமுகப்படுத்து றோம். கடல்ல நடக்கிற ஹாரர் கதை. இது மாதிரி இந்திய சினிமாவுல வேற படம் வரலை. அதுல நாங்க ஃபேன்டஸி அட்வெஞ்சர் விஷயத்தையும் மாயாஜால விஷயங்களையும் வச்சிருக்கோம். இந்தப் படத்துல வர்ற மாதிரி ஒரு விஷுவலை இந்திய படங்கள்ல இதுக்கு முன்னாடி பார்த்திருக்க மாட்டீங்க. கண்டிப்பா புது திரை அனுபவத்தைக் கொடுக்கும்னு உறுதியா சொல்றேன்”, என்றார்.
“இது நம்ம ஊரு கதை. தூத்துக்குடியில தொடங்கும். சபிக்கப்பட்ட கடல்னு அங்கு ஒரு பகுதி இருக்கும். அங்க மீன் பிடிக்கவே முடியாது. அதை ஏன் சபிக்கப்பட்ட கடல்னு சொல்றாங்கன்னா, அதுக்கு ஒரு பழங்கதை இருக்கு. அங்கயிருந்து ஆரம்பிச்சு எங்க போயி முடியுதுன்னு படம் போகும். அங்க இருக்கிற ஒரு இளைஞன், கிராமத்து நம்பிக்கையை மீறி அந்தக் கடலுக்கு மீன் பிடிக்க போறான். அப்பஎன்ன நடக்குதுன்னு திரைக்கதை இருக்கும். தூத்துக்குடி பகுதி ‘நேட்டிவிட்டி’யை பயன்படுத்தி இருக்கோம். கதை , நிலத்துலயும் கடல்லயும் நடக்கும். இதுக்கிடையில ஒரு மேஜிக் உலகமும் இருக்கு” என்றும் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-ஶ்ரீஷா கங்காதரன்