Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

ஜொர் மாநில சாலைகளின் நெரிசல் மற்றும் விமான டிக்கெட் உயர்வு – நாடாளுமன்றத்தில் விவாதம்

கோலாலம்பூர், 05 நவ. – நாடாளுமன்றக் கூட்டத்தில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தில், விமான டிக்கெட் விலைகளின் அதிகரிப்பும் ஜொஹோர் மாநில சாலைகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலும் குறித்து பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.

சண்டாக்கான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விவியன் வொங் கூறியதாவது, சமீப காலங்களில் சபா மாநிலத்திலிருந்து தலைநகரம் நோக்கி பயணிக்க வேண்டிய விமான டிக்கெட் விலைகள் சாதாரண மக்களுக்கு ஏற்றதாக இல்லை. அதனால், விமான நிறுவனங்கள் அரசாங்கத்திடம் பெறும் நிதி ஆதரவு விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, மெர்சிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முகமது இஸ்லாஹுத்தீன் அபாஸ் ஜொஹோர் மாநிலத்தின் சில முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் காணப்படும் அதிகமான வாகன நெரிசல் குறித்து கவலை தெரிவித்தார். குறிப்பாக, இஸ்கண்டார் பகுதி மற்றும் ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் (JS-SEZ) போக்குவரத்து அதிகரிப்பால் எதிர்காலத்தில் கடுமையான நெரிசல் பிரச்சனை உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார்.

அவர் மத்திய அரசை, அந்தப் பகுதிகளின் சாலைத்திட்டங்களை விரைவாக மேம்படுத்தவும், புதிய இணைப்பு பாதைகள் உருவாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த விவாதங்கள் 2026ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா விவாதத்தின் போது எழுந்தன. இதில் போக்குவரத்து வசதி, மக்கள் செலவு குறைப்பு மற்றும் பிராந்திய மேம்பாடு ஆகியவை முக்கிய அம்சங்களாக முன்னிலைப்படுத்தப்பட்டன.

-யாழினி வீரா

Scroll to Top