
அமைச்சர் கோபிந்த் சிங் தேவ், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP)டிஜிட்டல் பொருளாதாரத்தின் 25.5% பங்கு சேர்க்கும் இலக்கை அடைய, PMKS தொழில்களில் டிஜிட்டல் மாற்றத்தைத் தீவிரப்படுத்துவது அவசியம் என கூறினார்.
“தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்கின்றன, ஆனால் எங்கள் தொழில்கள் அதனை துரிதமாகப் பயன்படுத்த தயார் நிலையில் இல்லை. ஏற்கெனவே உள்ள டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதால் தொழில்களுக்கு பலம் சேர்க்க முடியும். எனினும், ஏன் தொழிலாளர்கள் இதனை ஏற்க தயங்குகிறார்கள் என்பது ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது,” என அவர் கூறினார்.
ஜெலாஜா மலேசியா டிஜிட்டல் @ பேராக் நிகழ்வில் பேசிய கோபிந்த், இந்நிகழ்ச்சியின் நோக்கம் PMKS தொழிலாளர்களிடமிருந்து கருத்துகளை சேகரித்து,டிஜிட்டல் மாற்ற சவால்களுக்கான தீர்வுகளை முன்மொழைப்பதாகும் என்றார்.
சைபர் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு பதிலளித்த அவர், அரசாங்கம் டிஜிட்டல் தளங்களில் நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
“சில சவால்கள் இருந்தாலும், பல தொழில்கள் புதிய தொழில்நுட்பங்களைத் தத்தெடுத்து அதிக வளர்ச்சியை அடைந்துள்ளன,” என அவர் கூறினார்.