Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

பள்ளி மாணவர்களை நோக்கி எட்டும் FINAS – படைப்பாற்றல் மிக்க தலைமுறையை உருவாக்கும் முயற்சி

கோலாலம்பூர், 05 நவ. – மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் (FINAS) எதிர்கால தலைமுறையை படைப்பாற்றல் துறையில் ஈர்க்கும் நோக்கில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.

இந்த முயற்சி “பிரிண்ட்ஸ் அண்ட் பிக்சல்ஸ் கண்காட்சி 2025” எனப்படும் நான்கு நாள் நிகழ்ச்சியின் வாயிலாக பெராக் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திரைப்படம், கலை, ஊடகம் மற்றும் டிஜிட்டல் துறைகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்த வழிவகை செய்வதாகும்.

FINAS தலைமை இயக்குநர் அஸ்மீர் சைஃபுத்தீன் முத்தலிப் தெரிவித்ததாவது, “இன்றைய மாணவர்கள் நாளைய படைப்பாளிகள். அவர்களுக்கு ஆரம்பத்திலேயே படைப்பாற்றலுக்கான வாய்ப்புகள் வழங்கப்படுவது மிகவும் அவசியம்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் குறும்படம், ஆவணப்படம், சமூக ஊடகக் காணொளி போன்ற துறைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, திரைப்படத் தொழிலில் நேரடி அனுபவத்தைப் பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவும், தொழில் உலக அனுபவமும் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

FINAS மேலும் தெரிவித்ததாவது, இந்த திட்டம் ஆரம்பமாக மட்டுமே இருந்து, எதிர்காலத்தில் மலேசியா முழுவதும் உள்ள பல பள்ளிகளுடன் இணைந்து இத்தகைய கல்வி மற்றும் படைப்பாற்றல் நிகழ்ச்சிகளை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முயற்சி நாட்டின் படைப்புத் துறை வளர்ச்சியையும், புதிய தலைமுறையின் திறமையையும் மேம்படுத்தும் முக்கியமான ஒரு படியாகப் பார்க்கப்படுகிறது.

-யாழினி வீரா

Scroll to Top