Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

ரோஹிங்க்யா சிறுமி உயிரிழப்பு – காணாமல் போன இடத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் சடலமாக மீட்பு

PICTURE:AWANI

மலேசியா: கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த ரோஹிங்க்யா சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில், நேற்று காலை அவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது பகிரங்கமாகி உள்ளது.

இந்த 10 வயது சிறுமி, கடந்த வாரம் தனது குடும்பத்துடன் இருந்த இடத்தில் இருந்து திடீரென காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர், மீட்பு படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அறிக்கை கிடைத்த உடனே சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள், சடலத்தை மீட்டு மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் மரணம் பலரையும் மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு அகதிகளின் பாதுகாப்பு மற்றும் வாழ்வு தொடர்பாக சர்வதேச சமூகம் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர் .

-முல்லை மலர் பொன் மலர் சோழன்

Scroll to Top