Tazhal Media – தழல் மீடியா

/ Apr 29, 2025
Latest News
tms

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு இலக்கவியல் அமைச்சின் தொடர் முயற்சி

Picture: Digital Ministry

கோலாலம்பூர், 4 மார்ச் — தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) திறன் பயிற்சிகள், துறை சார்ந்தோருடன் கலந்துரையாடல், பிற துறையைச் சார்ந்தவர்களோடு ஒத்துழைப்பு என இலக்கவியல் அமைச்சு தீவிரமாகத் திட்டமிட்டு செயல்படுத்திவருகிறது.

குறிப்பாக வேலையிடத்தில் செயற்கை நுண்ணறிவு எனும் கருப்பொருளில் அரசு ஊழியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு திறன்பயிற்சிகளை வழங்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 445,000 பேர் பயனடைவர் என்றும், மார்ச்சு 3 2025 தொடங்கி 7 மார்ச்சு வரை 300 பேருக்கு தேசிய இலக்கவியல் இலாகா நுண்ணறிவு திறன் பட்டறையை ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பட்டறையில் இலக்கவியல் அமைச்சு பணியாளர்கள் மட்டும் அல்லாது, பிற அமைச்சிலிருந்தும், அரசாங்க ஏஜென்சி-களிலிருந்தும் கலந்து கொள்வர்.

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம், ‘மலேசியாவின் எதிர்காலத்துக்கு செயற்கை நுண்ணறிவு’ எனும் திட்டத்தை Microsoft நிறுவனத்துடன் இணைந்து இலக்கவியல் அமைச்சு ஏற்பாடு செய்தது. மொத்தம் 800,000 உள்நாட்டுப் பணியாளர்களுக்கு இந்த வாய்ப்பு வழக்கப்படும். செயற்கை நுண்ணறிவு ஆதிக்கத்தால், எதிர்காலத்தில் 10 முக்கியத் துறைகளில், 620,000 பேரின் வேலையில் தாக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை மனிதவள அமைச்சு வெளிப்படுத்தியிருந்த நிலையில், கோபிந் சிங் அதற்கான முன்னேற்பாட்டுத் திட்டங்களை அறிவித்தார். அரசுத் துறைகளில் மட்டும் அல்லாமல், அனைத்துத் துறைகளிலுள்ளவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு அவசியம் ஆகும். ஆக தமதமைச்சு, மீன்பிடித்துறை, விவசாயத்துறையிலும், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முனைந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

-வீரா இளங்கோவன்

Scroll to Top