Tazhal Media – தழல் மீடியா

/ Apr 15, 2025
Latest News
tms

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்து விசாரணை விரைவில் முடிக்கப்படும் – சிலாங்கூர் போலீஸ் தலைவர்

Picture: Awani

சுபாங் ஜெயா, 8 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸ் பகுதியில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை, முதலில் திட்டமிட்டிருந்த இரு வாரங்களை விட முன்னதாகவே முடிக்க வாய்ப்புள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார்.

தொழில்நுட்ப விசாரணைக் குழு கடந்த திங்கள் முதல் 24 மணி நேரமும் இடைவிடாது விசாரணைகளை மேற்கொண்டு வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். “நேற்றுமுதல், புலம் தோண்டும் பணிகளில் கூடுதல் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதியை தொடர்ந்து கண்காணித்து, ஒவ்வொரு படியிலும் ஆய்வு பணி நடைபெற்று வருகிறது,” என்று அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை, சம்பவ இட கண்காணிப்பு மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 437 வீடுகளில் இருந்து, 270 வீடுகள் தற்போது மீண்டும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 571 வாகனங்களில் 88 வாகனங்கள் 50%க்கும் மேல் சேதமடைந்ததாகவும், 151 வாகனங்கள் எந்தவித சேதமும் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். இதுவரை 675 புகாருகள் பெற்றுள்ளதாகவும், 186 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

-யாழினி வீரா

Scroll to Top