
கோலாலம்பூர், 3 நவம்பர் 2025 – மலேசியாவின் இளைஞர்களின் ஆற்றல், ஒற்றுமை மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தும் நோக்கில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் (KBS) மற்றும் ஆஸ்ட்ரோ இணைந்து “ஜகூ ரகான் முடா (Jaguh Rakan Muda)” என்ற புதிய நிஜவாழ்க்கை நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த உடல் மற்றும் மன உறுதியை சோதிக்கும் போட்டி நிகழ்ச்சி, இளைஞர்களை சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல், குழு ஒருங்கிணைப்பு மற்றும் மன உறுதியை வளர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி 10 நவம்பர் 2025 முதல் தொடங்குகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 9.00 மணிக்கு Astro Ria (CH 104), 9.30 மணிக்கு Astro AEC (CH 306) மற்றும் 11.30 மணிக்கு Astro Vinmeen (CH 202)-ல் ஒளிபரப்பாகும்.
இளைஞர்களின் வளர்ச்சி மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் “Rakan Muda” திட்டத்தின் 10 முக்கிய துறைகளை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. அவை – ஜனநாயகம், மோட்டார் விளையாட்டு, செயல்பாட்டுத் திறன், சுற்றுச்சூழல், டிஜிட்டல், வெளிப்பாடு, இசை, தொழில் திறன், தொழில் முயற்சி மற்றும் நலன்புரி ஆகியவையாகும்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வ. ஹன்னா யியோ கூறியதாவது: “இந்த நிகழ்ச்சி, மலேசிய இளைஞர்களை தலைமைத்துவத்திற்கும், தன்னம்பிக்கைக்கும், சமூக பங்களிப்பிற்கும் தயார்படுத்தும் ஒரு தளமாக இருக்கும்,” என தெரிவித்தார்.
ஆஸ்ட்ரோ உள்ளடக்க தலைமை அதிகாரி அக்னஸ் ரோசாரியோ மேலும் கூறியதாவது, “Jaguh Rakan Muda என்பது மலேசிய இளைஞர்களின் உண்மையான உற்சாகத்தையும், உறுதியையும் வெளிப்படுத்தும் ஒரு தேசிய அளவிலான தளமாக இருக்கும்,” என்றார்.
நாட்டின் ஐந்து மண்டலங்களில் நடைபெற்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 முதல் 30 வயதுடைய போட்டியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். வெற்றி பெறும் குழுவுக்கு ரி.ம.100,000 பரிசு வழங்கப்படும்.



