
மலாக்கா, 17 பிப்ரவரி — மலாக்கா மாநில இந்திய மாணவர்கள் கல்வி மேம்பாட்டு அமைப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய B40 மாணவர்களுக்கு பள்ளிக் கட்டண செலவுகளை பூர்த்தி செய்ய நன்கொடைகள் கோருகிறது. PROGRAM BACK TO SCHOOL திட்டத்தின் கீழ், இந்த அமைப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சிகள், உணவு மற்றும் கல்விச் செலவுகளை வழங்க உறுதிபூண்டுள்ளது.
தற்போது, 60 மாணவர்களுக்கான கட்டண செலவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 21 மாணவர்கள் கல்விக்கட்டணத்திற்காக உதவியை எதிர்பார்க்கின்றனர். ஒவ்வொரு மாணவருக்குமான கட்டண செலவு சுமார் RM 200, இதற்கான மொத்த செலவு RM 4,200 ஆகும்.
இந்த மாணவர்கள் தங்களது கல்வியை தொடர, சமூகத்தில் உயர்வுப் பெற இந்த உதவி அவசியம். கல்வியே எங்கள் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியத் தூணாக இருக்கும். ஆதரவு இல்லாமல், அவர்களின் கல்வி பயணம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
உதவிக்கையாக, உங்கள் நன்கொடை நேரடியாக திருமதி. விக்னேஸ்வரி பிச்சையா (014-368 9275) அவர்களிடம் தொடர்பு கொண்டு வழங்கலாம். மேலும் தகவல்களுக்கு, அவர்களின் முகநூல் பக்கத்திலும் விபரங்கள் காணலாம்.
உங்களது சிறு உதவியும், இம்மாணவர்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப உதவியாக இருக்கும்.
நன்கொடை வழங்க வேண்டிய வங்கி விவரம்:
🔹 554110545984 Maybank
🔹 Persatuan Pembangunan Pendidikan Pelajar-Pelajar India Negeri Melaka
இந்த உயரிய நோக்கத்திற்காக உதவிடும் அனைவருக்கும் நன்றி! கல்வியே சமூக வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதை மனதில் கொண்டு, நம் மாணவர்களை உதவிக்கரம் நீட்டி ஆதரிப்போம்! 🙏
-வீரா இளங்கோவன்