Tazhal Media – தழல் மீடியா

3:02:32 PM / Mar 16, 2025
Latest News

சித்தார்த், மாதவன், நயனின் ‘டெஸ்ட்’ நெட்ஃப்ளிக்ஸில் நேரடி ரிலீஸ்

படம் : கூகுள்

இந்தியா, 4 பிப்ரவரி – திரையரங்குகளில் அல்லாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது ‘டெஸ்ட்’ திரைப்படம்.

சில மாதங்களுக்கு முன்பே அனைத்து பணிகளும் முடிவுற்று வெளியீட்டுக்கு தயாராகவுள்ள படம் ‘டெஸ்ட்’. இதன் சிறு டீஸர் மட்டுமே வெளியாகி இருந்தது. தற்போது படத்தின் டீஸர் ஒன்றை வெளியிட்டு, இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். இதன் உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இதன் வெளியீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒய் நாட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்த சசிகாந்த், ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் சித்தார்த், மாதவன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘டெஸ்ட்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் சமயத்தில் இதனை நேரடி ஓடிடி வெளியீடு என்ற முடிவை எடுத்துள்ளது படக்குழு.

படங்கள் வாங்குவதை ஓடிடி நிறுவனம் குறைத்துவிட்டது, இனிமேல் ஓடிடி வியாபாரத்தை வைத்து படங்கள் தயாரிக்க முடியாது என்று தகவல் பரவிவரும் நிலையில் ‘டெஸ்ட்’ படத்தினை நேரடி ஓடிடி வெளியீட்டை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

-ஶ்ரீஷா கங்காதரன்