
கோலாலம்பூர், 3 பிப்ரவரி — கோலாலம்பூர், ஜாலான் இப்போவில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று பிப்ரவரி 3, 2025 (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பல்வேறு புனித நிகழ்வுகள் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 1 (சனிக்கிழமை) அன்று, கோவில் மூல மூர்த்திகளுக்கான நவரத்தினக் கற்கள் பதிக்கும் சிறப்பு பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இந்த புனித வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தெய்வீக காட்சியை தரிசித்தனர். சிறப்பு பூஜை மற்றும் வேத மந்திரங்களுடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த விசேஷ நிகழ்வில் மக்கள் கலைஞர் கவிமாரனும் கலந்து கொண்டு, பக்தர்களுடன் உற்சாகமாக வழிபாடுகளில் ஈடுபட்டார். மேலும், சிறப்பு பூஜையின் முக்கியத்துவம் குறித்து அங்கிருந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வுகளை முன்னிட்டு, புனித தீர்த்தங்கள், ஹோமங்கள், யாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. மகா கும்பாபிஷேகம் இன்று (பிப்ரவரி 3) நடைபெற இருப்பதால், பக்தர்கள் அதிக அளவில் திரளவுள்ளனர்.
கோவில் நிர்வாகம், பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
-வீரா இளங்கோவன்