
சிலாங்கூர், 24 அக். –
இசை உலகின் பின்னணி பாடகர் ஸ்ரீதர் சேனாவின் ‘SENA FEST’ எனும் இசை நிகழ்ச்சி சுபாங் ஜெயாவில் ஏற்பாடு செய்யப்படுள்ளது.
இந்த சிறப்பான நிகழ்ச்சி வரும் 24 ஜனவரி 2026 அன்று மாலை 7 மணி முதல் Auditorium Tan Sri Jeffrey Cheah, USJ 1, Persiaran Subang Mewah, Subang Jaya, சிலாங்கூர் பகுதியில் நடைபெற உள்ளது.
இந்த விழாவை பரமேஸ் புரோடக்க்ஷன் பெருமையுடன் வழங்குகிறது. ஸ்ரீதர் சேனாவுடன் பல பிரபல கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர். அதில் மனசிலயோ தீப்தி, ப்ரியா அர்சனா, டாக்டர் வர்ஷா பிலாய், யுவிஷா யார், கமல் ராம், அறிவிப்பாளராக டெனிஸ் குமார் மற்றும் பரமேஸ் ஆகியோர் மேடையை கலக்கவுள்ளனர்.
இசை, நடனம், உணர்ச்சி மற்றும் கலை ஒன்றாக கலந்த மாபெரும் இசை விருந்தாக இந்த விழா அமையவுள்ளது. ரசிகர்கள் தங்கள் பிரியமான பாடகரை நேரில் காணும் வாய்ப்பை இழக்காமல் முன்கூட்டியே டிக்கெட்டுகளைப் பதிவு செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு +6017 675 4612 என்ற என்னுடன் WhatsApp வழியாக தொடர்பு கொள்ளலாம்.
இசை ரசிகர்களுக்கு இது மறக்க முடியாத இரவாக அமையும்!



