Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

மலேசியாவில் சரிகமபா Lil Champs Live” சிறப்பு இசை நிகழ்ச்சி

படம்: வீரா இளங்கோவன்

கோலாலம்பூர், 23 மே: இந்தியாவின் பிரபல Zee தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற சரிகமபா Lil Champs பாடல் போட்டியில் மூன்றாவது இடத்தை வென்று மலேசியாவின் இசை உலகிற்கு பெருமை சேர்த்துள்ள ஹெமித்ரா ரவிச்சந்திரன், செராஸ் மகோத்தா தமிழ்ப்பள்ளியின் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வெற்றியை கொண்டாடும் வகையில், “சரிகமபா Lil Champs Live” எனும் ஒரு சிறப்பு இசை நிகழ்ச்சி ஜூன் 28, 2025 அன்று Menara PGRM, Dewan Wawasan, செராஸ்-இல் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையாற்றவிருக்கிறார். ஹெமித்ராவுடன் சேர்ந்து, அந்த போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பாடகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்கவிருக்கின்றனர்.

Zee தமிழ் தொலைக்காட்சியால் “மலேசியாவின் சுவர்ணலதா” என பாராட்டப்பட்ட 12 வயது ஹெமித்ரா, இந்த கௌரவ நிகழ்ச்சி குறித்து பெருமிதம் அடைந்தவையாக “வணக்கம் மலேசியா” நிகழ்ச்சியின் வாயிலாக தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

இது போன்ற வெற்றிகள், இசை மற்றும் கலைத்துறையில் ஆர்வமுள்ள இளம் தலைமுறைக்கு ஓர் உந்துதலாக அமைவதோடு, உள்ளூர் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் அவரது திறமையை ரசிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய ஸ்பான்சர்களாக Vishal Steremzy Enterprise, Tasly Marketing Malaysia Sdn. Bhd, தாமரை ஜீவல்ஸ் Sdn. Bhd உள்ளிட்ட பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் விசால், “நாட்டிற்கு பெருமை சேர்த்த ஹெமித்ராவை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறேன்” என தெரிவித்தார்.

முழுக்க முழுக்க சரிகமபா Lil Champs பாடகர்களுடன் ஹெமித்ரா பாடவுள்ள இந்த நிகழ்ச்சி, ரசிகர்களின் உள்ளம் கொள்ளை கொள்ளும் ஒரு மெமரபிள் இசை நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🎟️ இந்த இசை மாமொழி நிகழ்ச்சியை நேரில் காண விரும்புவோர் Ticket2U.com என்ற இணையதளத்தின் மூலம் டிக்கெட்டுகளைப் பதிவு செய்யலாம்.

-யாழினி வீரா

Scroll to Top