
கீழ் பேரா மற்றும் பாகன் டத்தோ மாவட்டங்களை உட்படுத்திய கைப்பந்து போட்டியில் ஊத்தான் மெலிந்தாங் பாரதி தமிழ்ப்பள்ளி பெண்கள் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் நிலையில் வெற்றி வாகை சூடியது! இறுதி ஆட்டத்தில் தெலுக் பூலோ தோட்ட தமிழ்ப்பள்ளியை சந்தித்த ஊத்தான் மெலிந்தாங் பாரதி தமிழ்ப்பள்ளி வீராங்கனைகள் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப் பெற்று கோப்பையை தட்டிச் சென்றனர். பங்குப்பெற்ற மாணவிகளுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்!