Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

மம்மூட்டி-நயன்தாரா மீண்டும் இணைப்பு – மோகன்லால், ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரங்களில்!

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான மம்மூட்டியும் நயன்தாராவும் ஏற்கெனவே ‘பாஸ்கர் தி ராஸ்கல்’, ‘புதிய நியமம்’ போன்ற வெற்றி படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில், மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய மலையாள திரைப்படத்தில் இந்த ஜோடி மீண்டும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடிக்க, மோகன்லால் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார்.

மேலும், ஃபகத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், ரேவதி உட்பட பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

தற்போது, நயன்தாரா இப்படத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமாகியிருப்பதுடன், கேரளாவில் நடைபெறும் படப்பிடிப்பிலும் இணைந்துள்ளார்.

இந்தப் படத்திற்கு ‘எம்எம்எம்என்’ என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Scroll to Top