
சபா, 4 பிப்ரவரி — மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தெரிவித்துள்ளதுபடி, சபாவின் சண்டக்கான் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடுமையான நிலைக்கான கனமழை நாளை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 5.45 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பில், Telupid, Beluran, Sandakan போன்ற மாவட்டங்கள் மிகுந்த பாதிப்பை சந்திக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சரவாக்கின் சில பகுதிகளிலும் தொடர்ச்சியான மழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் Kuching, Serian, Samarahan, Sri Aman, Betong, Sarikei, Sibu, Mukah ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
மேலும், சபா மாநிலத்தின் மேற்குக் கரை (Ranau, Kota Belud), Sandakan (Kinabatangan), Kudat ஆகிய இடங்களுக்கும் தொடர்ச்சியான மழைக்கு MetMalaysia எச்சரிக்கை அறிவித்துள்ளது.
வானிலை தொடர்பான புதிய தகவல்களை பெற பொதுமக்கள் MetMalaysia அதிகாரப்பூர்வ இணையதளம், myCuaca மொபைல் செயலி மற்றும் சமூக ஊடகத்தளங்கள் மூலம் அணுகலாம். மேலும், 1-300-22-1638 என்ற MetMalaysia ஹாட்லைன் எண்ணை அழைத்து கூடுதல் தகவல்களையும் பெறலாம்.
வெள்ள அபாயம், நிலச்சரிவு போன்ற விபத்துகளுக்கு உள்ளாகாமல் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
-யாழினி வீரா