Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

பெர்னாமா சட்டதிருத்த மசோதா 2024 – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

Picture: Bernama

கோலாலம்பூர், 26 பிப்ரவரி — மலேசியாவில் ஊடகத் துறையை இன்னும் விரிவாக்கி ஒருங்கிணைப்பதற்காக, பெர்னாமா சட்டம் 1967 (Act 780) திருத்தப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட பெர்னாமா சட்டதிருத்த மசோதா 2024 இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஓட்டுகளுடன் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டம் அமலாகிய 1967 ஆம் ஆண்டிலிருந்து முதல் முறையாக அதில் திருத்தம் செய்யப்படுகிறது. இதற்கான இரண்டாம் வாசிப்பின்போது தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், இத்தொகுப்பு ஊடக துறையின் தற்போதைய வளர்ச்சி மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்படுவதாக கூறினார்.

“இந்த மசோதா ஊடக மற்றும் இலக்கவியல் துறையை புதுப்பிக்க மட்டுமல்லாது, அரசாங்க தகவல்தொடர்பு முறையையும் தற்போதைய சவால்களுக்கு ஏற்ப மேம்படுத்தும். இது ஊடக துறையை எல்லோரும் அணுகக்கூடியதாக மாற்றும், அச்சிதழ்கள் மட்டுமல்லாது மின்னணு மற்றும் இலக்கவியல் ஊடகங்களை இணைக்கும்,” என்று அவர் கூறினார்.

மேலும், மலேசியா மாடானி தளத்திற்கேற்ப, பாரம்பரிய ஊடகத்திற்கும் இலக்கவியல் ஊடகத்திற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த இந்த மசோதா உதவும். தகவல் பரப்புதல், இலக்கவியல் பிணையம், மற்றும் சமூக தொடர்பை வலுப்படுத்தும் நோக்கிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அச்சு ஊடகங்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் பெர்னாமாவின் நிர்வாகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், “பத்திரிகை உரிமையாளர்கள்” என்ற வரையறையை “ஊடக நிறுவனங்கள்” என விரிவாக்க வேண்டும் என்ற முடிவிற்கு அமைச்சகம் வந்துள்ளது.

இந்த மசோதா Act 780 இன் பிரிவு 2 ஐ மாற்றி, “மீடியா நிறுவனம்” என்பது பத்திரிகை, பதிப்புகள், ரேடியோ, தொலைக்காட்சி மற்றும் அனைத்து தகவல் தொடர்பு வகைகளையும், குறிப்பாக மின்னணு மற்றும் இலக்கவியல் தளங்களையும் உள்ளடக்கும் என விளக்கப்படுகிறது.

இத்திருத்தம் ஊடகத்துறையில் நியாயம், நேர்மை, மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்த, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மாடானி அரசின் உறுதிப்பாட்டைக் காட்டுவதாக ஃபஹ்மி தெரிவித்தார்.

-யாழினி வீரா

Scroll to Top