Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

கோவில் விவகாரங்களை தடுக்கும் வகையில் ஒற்றுமைச் சட்டம் தேவை – பிபிபி தேசிய தலைவர் டத்தோ லோகபாலா வலியுறுத்தல்

படம்: தழல் ஊடகம்

கோலாலம்பூர், 15 ஜூன்: பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, சமீபத்தில் ஏற்பட்டுள்ள “கோவில் ஹராம்” விவகாரங்கள் இந்திய சமூகத்தில் தீவிரம் ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்காலத்தில் இப்படியான நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஒற்றுமைச் சட்டம் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில், திடீரென “கோவில் ஹராம்” எனக் குறிக்கப்பட்டது இந்தியர்களிடையே கடும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள பல ஆலயங்கள் சட்டவிரோத கோவில்கள் எனக் கூறப்பட்டதையும் அவர் நினைவுபடுத்தினார். பிபிபி மத்திய செயலவைக் கூட்டத்துக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் பொழுது பேசிய டத்தோ லோகபாலா, பினாங்கு மாநிலத்தில் பி40 குடும்பங்களைச் சேர்ந்த அனைத்து இன மக்களுக்கும் வீட்டு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

-யாழினி வீரா

Scroll to Top