
கோலாலம்பூர், 17 பிப்ரவரி – இசை நேயர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ராஜா ராப்ஸொடி: மாஸ்திரோ லைவ் இன் கான்சர்ட்’ நிகழ்ச்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு, ஷா ஆலாம் TSR கண்காட்சி மண்டபத்தில் வெகுவிமர்சனத்துடன் நடைபெற்றது. பத்திரிகை நிருபர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இசைஞானி ரசிகர்களை உள்ளடக்கிய 800-க்கும் மேற்பட்டோரின் கலந்துகொள்வில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த பிரமாண்ட நிகழ்வில், பிரதமர் இலாக்கா ( சட்டம் மற்றும் நீதித்துறை சீர்திருத்தம்) துணையமைச்சர் எம். குலசேகரன், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு, மற்றும் Persatuan Karyawan சங்கத்தின் தலைவர் டத்தோ’ ஃப்ரெட்டி பெர்னாண்டஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

“ராஜா ராப்ஸொடி” நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் ஏற்பாட்டாளருமான Pink Creative Agency-யின் நிறுவனர் ரவிவர்மன் விக்கிரமன் பேசுகையில்,
“இளையராஜாவின் இசையை நேசிக்கும் மலேசிய ரசிகர்களின் சார்பாக, ரசிகர்கள் கேட்க விரும்பும் பாடல்களை சேகரித்து இந்த இசை நிகழ்வை அமைத்திருக்கிறேன். இது, மாயஸ்திரோவுக்கு செலுத்தும் ஒரு மாபெரும் அஞ்சலியாக இருக்கும்.”

மலேசிய இசை வரலாற்றில் முதன்முறையாக, மிழகத்தின் சென்னை மற்றும் ஹங்கேரி நாட்டின் புடாபேஸ்ட் நகரிலிருந்து 70 பேர் கொண்ட இசைக் கலைஞர்களுடன், இசைஞானி இளையராஜா தலைமையில், ஒரு மிகப்பெரிய தமிழ் ஒர்கெஸ்ட்ரா இசை நிகழ்வை நடத்த உள்ளது. இது, இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
இதனிடையே, இசைஞானி இளையராஜா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபோது, “இந்த இசை நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். சென்னை மற்றும் புடபெஸ்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இசைக்கலைஞர்கள், இது வரை நீங்கள் கண்டிராத அளவிலான இசை நிகழ்வை வழங்க உள்ளனர்,” என்றார். மேலும், “மலேசிய ரசிகர்கள் என்னுடைய ப்ரியமானவர்கள்” என்ற அவரது உரை, ரசிகர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மலேசிய இசை கலைஞர்களின் இரண்டு நேரடி இசை நிகழ்வுகள் நடத்தப்பட்டன, இதன் மூலம் இளையராஜாவும் பிரமிப்படைந்தார்.
ரசிகர்கள் அதிக அளவில் கலந்துகொள்ளும் வகையில் 15% சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. RAAJA15% எனும் கூப்பன் கோடினைப் பயன்படுத்தி, மார்ச் 5, 2025 வரை வழங்கப்படும் இந்த சலுகையை பயனாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ராஜா ராப்ஸொடி இசை நிகழ்ச்சிக்கான விவரங்கள்:
📅 தேதி: ஏப்ரல் 5, 2025 (சனி)
📍 இடம்: கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் ஹாக்கி விளையாட்டரங்கம்
⏰ நேரம்: மாலை 6:00 PM முதல்
🎟 டிக்கெட் விற்பனை: myticket.asia 💳 பணம் செலுத்தும் வசதி: 3 மாதம் & 6 மாத கட்டண திட்டம் (Atome மூலம்)
📞 ஊடக தொடர்புகளுக்கும், நன்கொடைத் தொடர்புகளுக்கு:
ரவிவர்மன் விக்கிரமன்
(தயாரிப்பாளர் / கிரியேட்டிவ் இயக்குநர்)
📧 மின்னஞ்சல்: pinkcreativeagency@gmail.com
📱 தொலைபேசி: 019-3015 761