
Picture : Awani
தாசேக் கெலுகோர் – செப் 29 : வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் (PRN) எந்தக் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதைக் குறித்த இறுதி முடிவை அமான் கட்சியின் மத்திய தலைமையே எடுக்கும் என்று கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ மொகமட் சபு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், மாநில அளவிலான பிரிவுகள், இளைஞர் பிரிவு அல்லது மகளிர் பிரிவு தங்களுடைய பரிந்துரைகளை முன்வைக்கலாம். ஆனால், அந்த பரிந்துரைகள் ஆலோசனையாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். இறுதியான தீர்மானம் மத்திய மட்டத்தில் மட்டுமே எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.
மாநிலம், [pemuda, wanita] – யார் வேண்டுமானாலும் எத்தனை இடம் வேண்டும் என்று பரிந்துரை செய்யலாம். ஆனால் முடிவு எப்போதும் மத்திய தலைமையகத்தில்தான் எடுக்கப்படும், என்று மொகமட் சபு கூறினார்.
அவர் சமீபத்தில் பினாங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
மேலும், அமான் கட்சி தற்போது பக்காத்தான் ஹராபான் கூட்டணியின் ஒரு பகுதியாக இருப்பதால், இட ஒதுக்கீடு தொடர்பான முடிவுகள் பிற கூட்டணி கட்சிகளுடனான விவாதத்திற்குப் பின் எடுக்கப்படும் எனவும் அவர் விளக்கினார்.
அவரின் கூற்றுப்படி, தேர்தல் என்பது மக்கள் நம்பிக்கையைப் பெறும் ஒரு வாய்ப்பு. எனவே, மக்கள் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளுக்கு ஏற்பவேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றார்.



