Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

அனுமதி மீறிய லோரி – FRU வாகன விபத்துக்குக் காரணம் என உறுதி

தெலுக் இந்தான், 31 அக். – கடந்த வாரம் தெலுக் இந்தான் பகுதியில் இடம்பெற்ற FRU லாரி விபத்தின் முக்கிய காரணம் “அதிக எடை ஏற்றிய லோரி” என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு பணி குழு வெளியிட்ட ஆரம்ப அறிக்கையின்படி, விபத்தில் ஈடுபட்ட லோரி (பதிவு எண் AKL 4674) அனுமதிக்கப்படாத வகை பொருளான கறிக்கல் (kerikil) ஏற்றி சென்றது கண்டறியப்பட்டது. அந்த லோரி “கோல்” (coal) வகை பொருட்களை மட்டுமே ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அனுமதி மீறி கறிக்கல் ஏற்றிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், லோரியின் மொத்த எடை 40,960 கிலோ கிராம் என பதிவாகியிருந்தது. இது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட 24,000 கிலோ கிராமை விட 70 சதவீதத்திற்கும் அதிகம் என அறிக்கை கூறுகிறது.

விபத்து நிகழ்ந்த நாளில் காலை 8.51 மணிக்கு, ஜாலை சிகுசு – சுங்கை லம் பம் பகுதியில், அந்த லோரி எதிர்புற வழியில் இருந்து வந்து FRU ட்ரக்கை நேரடியாக மோதியது. இந்த மோதலில் பலர் காயமடைந்ததுடன், வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன.

அறிக்கையில் மேலும் கூறப்படுவதாவது, சம்பந்தப்பட்ட லோரி பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளில் (audit மற்றும் JISA பரிசோதனைகள்) தோல்வியடைந்திருந்தது. இதனால், போக்குவரத்து பாதுகாப்பு விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம் என குழு பரிந்துரைத்துள்ளது.

-யாழினி வீரா

Scroll to Top