Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

“மக்கள் நல சேவகர்” எனும் உயரிய விருது டாக்டர் கருணாகரனுக்கு டத்தோ கோபாலகிருஷ்ணன் வழங்கி கௌரவித்தார்.

Picture: Veera

கோலாலம்பூர், 2 ஜூன்: மலேசிய தலைநகரில் நடைபெற்ற சிறப்பு விழாவில், “மக்கள் நல சேவகர்” எனும் மதிப்புமிக்க விருது, தமிழக அரசின் உயர்மட்டத் தலைவர் மற்றும் சமூக நலத்திற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கி வரும் ஈகை டாக்டர் கருணாகரனுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவை டெலி ஸ்டார் நிறுவனத்தின் எஸ்.பி. மணிவாசகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மலேசியத் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவர், டாக்டர் கருணாகரனின் சமூகப்பணி, மனிதநேயம் மற்றும் தமிழரின் நலனுக்காக செய்த கடமைகளை பாராட்டி, “மக்கள் நல சேவகர்” விருதினை வழங்கி அவரை கௌரவித்தார்.

சோமா அரங்கில் நடைபெற்ற இந்த விழா, மக்கள் கூட்டத்தால் நிரம்பி சிறப்புற நடைபெற்றது. கவிஞர் சீராகி விழாவை திறமையாக வழிநடத்தினார். மலேசிய இந்திய சமுதாய மேம்பாட்டு இயக்கத்தின் (மிக்காஸ்) சார்பாக சோலை பாஸ்கரன் அனைவரையும் வரவேற்றார்.

முத்தமிழ்சங்க துணைத் தலைவர் எட்வர்ட் ஞானசேகரன், கலைஞர் கோடீஸ்வரி, டத்தோ முத்துரத்தினம், டாக்டர் ரம்சே, நம்மவர் கூட்டுறவு செயலாளர் சுப்பையா சுப்பிரமணியம், ம இ கா கலாச்சாரத் தலைவர் விஜய் ஆனந்த், கலைஞர் எம்.ஜி.ஆர் விஜயசேகர், மேடை நாடக ஆசிரியர் ஶ்ரீதரன், கவிஞர் A. R. சுப்ரமணியம், தமிழர் கலைமன்றத் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் காளிமுத்து, தமிழ் எழுத்தாளர் வாசக இயக்கத் தலைவர் மதியழகன், கருணைக் கரங்கள் தலைவர் சுப்ரமணியம், தொழிலதிபர் சங்கர் நாயுடு, பத்திரிக்கையாளர் ராமதாஸ் மனோகரன், எம்.கே.யு (MKU) எஸ்.பி. பிரபா, புகைப்படக் கலைஞர் மலையாண்டி, சமூக ஆர்வலர் லோகநாதன், தமிழ்ச்சங்கத் தலைவர் மீடியா பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றி நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தனர்.

விழாவின் இறுதியில், டாக்டர் கருணாகரன் தனது மனைவி மற்றும் குடும்பம் சார்பாக, இந்த விருது தனக்கு பெற்ற மிகப்பெரிய வெளிநாட்டு அங்கீகாரமாக அமைந்துள்ளது என்றும், இதனை மனதார மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் கூறி நன்றியை தெரிவித்தார்.

-யாழினி வீரா

Scroll to Top