Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

முன்னாள் மலேசிய தேசிய வீரர் பி. தர்மலிங்கம் மரணம் – கால்பந்தாட்டத்துக்கு பெரும் இழப்பு

கோலாலம்பூர், 12 செப்டெம்பர் – 1980களில் மலேசியாவின் தேசிய கால்பந்து அணியில் விளையாடிய முன்னாள் வீரர் பி. தர்மலிங்கம் இன்று காலமானார். அவருக்கு 64 வயது.

மலேசிய கால்பந்து சங்கத்தின் (FAM) துணைத் தலைவர் மற்றும் ஆமெச்சூர் லீக் (AFL) தலைவர் தத்துக் எஸ். சிவசுந்தரம் இந்த துயரச் செய்தியை உறுதிப்படுத்தினார். அதிகாலை தனது இல்லத்தில் குளியலறையில் தவறி விழுந்த தர்மலிங்கம், கிள்ளான் துங்கு அம்புவான் பொது மருத்துவமனைக்கு (HTAR) சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1961ஆம் ஆண்டு பிறந்த தர்மலிங்கம், 1980களில் மலேசியா தென்கிழக்கு ஆசியா அரங்கில் புகழுடன் விளங்கிய காலத்தில் தேசிய அணியின் முக்கிய தூணாக விளங்கினார். ஹரிமாவ் மலாயா அணி அப்போதைய காலத்தில் எதிரிகளால் அஞ்சப்பட்ட அணியாகக் கருதப்பட்டது.

அவரது அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் காரணமாக, ஒவ்வொரு போட்டியிலும் பயிற்சியாளர்களால் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

“மறைந்தவர் மைதானத்திலும் மைதானத்திற்கு வெளியேயும் கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு கொண்டவர். அவரின் மறைவு, மலேசிய கால்பந்தாட்டத்திற்கு மிகப்பெரிய இழப்பு,” எனத் தெரிவித்தார் டத்தோ சிவசுந்தரம்.

-யாழினி வீரா

Scroll to Top