
படம் : கூகுள்
கேரளா, 27 ஜனவரி- பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் உருவாகி உள்ள லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ பட டீசர் வெளியாகி உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘லூசிஃபர்’. இந்தப்படத்தின் மூலம் நடிகர் பிருத்விராஜ், இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். இதில், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், சாய் குமார் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகம் எம்புரான்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இயக்கி உள்ளார். மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம் பான் இந்தியா முறையில் வெளியாக உள்ளது.
இதில் அர்ஜுன் தாஸ், சூரஜ், கரோலின், கார்த்திகேய தேவா உட்பட முதல் பாகத்தில் நடித்த நடிகர்களும் நடித்து உள்ளனர். இதன் படப்பிடிப்பு இந்தியா மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
-ஶ்ரீஷா கங்காதரன்