
PICTURE:AWANI
கோலாலம்பூர் 2 ஏப்ரல் 2025: மலேசியாவின் செமேனஞ்சுங் பகுதிகளில் (பட்னா மலேசியா) டீசல் விலை லிட்டருக்கு RM3.03 எனவும், சபா, சரவாக், லாபுவான் பகுதிகளில் லிட்டருக்கு RM2.15 எனவும் நிலைத்திருக்கிறது. இந்த விலை ஏப்ரல் 9 வரை தொடரும் என்று மலேசிய நிதியமைச்சகம் (MOF) அறிவித்துள்ளது.
இதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பில், RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு RM2.05 என மாற்றமின்றி தொடரும் என்றும், RON97 விலை லிட்டருக்கு RM3.33 என 5 சேன் உயர்வு கண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விலைகள் தானியங்கி விலை நிர்ணய முறைமை ) அடிப்படையில் வாராந்திர மதிப்பீட்டின் மூலம் நிர்ணயிக்கப்பட்டதாக MOF தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு சந்தை மாற்றங்களை கண்காணிக்கிறது
MOF தனது அறிவிப்பில், சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, RON97 பெட்ரோல் விலையை சரிசெய்து நிர்ணயிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. உலக சந்தையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
“அரசு எப்போதும் பொதுமக்களின் நலனையும், வாழ்க்கைத் தரத்தையும் கருத்தில் கொண்டு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும்,” எனவும் நிதியமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மலேசிய மக்களின் பொருளாதார நிலையை பாதிக்காமல், விலை நிர்ணயத்தில் சீரான நிலைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-முல்லை மலர் பொன் மலர் சோழன்