Tazhal Media – தழல் மீடியா

/ Sep 27, 2026
Latest News
tms

“மலாய் முதல் என்பதற்கு இப்போது இடமில்லை – தான்ஸ்ரீ முகைதின் யாசின்

Picture: Veera

ஷா ஆலாம், 5 மே: பெரிகாத்தான் நேஷனல் (PN) தலைவர் தான்ஸ்ரீ முகைதின் யாசின், கடந்த காலத்தில் தெரிவித்திருந்த “மலாய் முதலில்” என்ற தனது வாக்குமூலத்தை தற்போது பொருத்தமற்றதென மறுத்துள்ளார்.

தற்போது அனைத்து மலேசியர்களுக்காகப் பணியாற்றும் தலைவராகத் தன்னை பார்க்கும் வகையில் அவரது எண்ணக்கட்டம் மாறியுள்ளதாக முகைதின் கூறியுள்ளார்.

“நான் ஒரு மலாய் மலேசியர் தான். ஆனால் என் எண்ணம் மலாய்க்காரருடன் மட்டுப்படவில்லை. சீனர்கள், இந்தியர்கள் மற்றும் பிற இனத்தவர்களையும் கருத்தில் எடுக்க வேண்டும். ஏனெனில், நான் மலேசியாவின் தலைவராக இருக்கிறேன்,” என அவர் தெரிவித்தார்.

“நான் ஒரு காலத்தில் ‘மலாய் முதலில்’ என்றேன். அது இப்போது முக்கியமல்ல. நான் அனைத்து மலேசியர்களையும் எண்ணும் மலாய்க்காரன்,” என அவர் MIPP (மலேசிய இந்திய மக்கள் கட்சி) ஏற்பாடு செய்த நிகழ்வில் பேசினார்.

2010ல் பிரதமர் பதவிக்கு முன்னர், முகைதின் கூறிய அந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அது ‘நான் மலேசியர் அல்ல’ என்ற அர்த்தத்தில் அல்ல என அவர் விளக்கியிருந்தார்.

இந்த புதிய பார்வை, பல இனங்களை கொண்ட மலேசிய சமூகத்தில் ஒருமித்தத்தை நோக்கி PN கட்சி நகர்கிறது என்பதற்கான சைகையாக பார்க்கப்படுகிறது.

-யாழினி வீரா

Scroll to Top