Tazhal Media – தழல் மீடியா

/ Jul 22, 2026
Latest News
tms

பணிநேரத்திற்கு வெளியே பாதுகாப்பு , புதிய திட்டம் விரைவில் ; பிரதமர் அன்வார்

Picture: Awani

கோலாலம்பூர் – செப் 29 : மலேசிய அரசு, பணிநேரத்திற்கு வெளியே பணியாற்றும் தொழிலாளர்களுக்காக புதிய பாதுகாப்புத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

அவர் கூறுகையில், சமூக பாதுகாப்பு வலையமைப்பில் சேராத பல தொழிலாளர்கள் இன்று இருக்கின்றனர். இதில் தற்காலிகத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், (SKIM} துறையில் ஈடுபடுபவர்கள், அத்துடன் பக்க வேலைகளை மேற்கொள்ளும் பணியாளர்களும் அடங்குவர். இவர்கள் பணியின்போது அல்லது அதற்குப் புறம்பாக நேரும் விபத்துகளில் சிக்கினால் பாதுகாப்பு கிடைக்கவில்லை. இதை கருத்தில் கொண்டு அரசு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

இன்று வேலைச் சூழல் மாறிவருகிறது. ஒருவர் காலை வேலையை முடித்துவிட்டு மாலை வேறு இடத்தில் உழைக்க வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய சூழலில் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், என அவர் கூறினார்.

மேலும், நாட்டில் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை முன்னிட்டு, அவர்கள் மரியாதையுடன் வாழ அரசு முயற்சி எடுக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த புதிய திட்டம் PERKESO அமைப்பின் (LINDUNG) முயற்சியுடன் தொடர்புடையது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தொழிலாளர்களின் நலன் மேம்படும் மட்டுமல்லாமல், எதிர்கால வேலைச் சூழலுக்கும் வலுவான அடித்தளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top