Tazhal Media – தழல் மீடியா

/ Apr 02, 2025
Latest News
tms

ஜொகூர் பாரு: கார்பாக்ஸ் கடை தீ – 7 மோட்டார்சைக்கிள்கள் எரிந்து சேதம் அடைந்தது

Picture:AWANI

ஜொகூர் பாரு 1 ஏப்ரல் 2025: தாமான் கெபுன் தே பகுதியில் உள்ள ஒரு கார் உதிரிப்பாக மற்றும் அணிகலன் கடையில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் கடையின் பாதி மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏழு மோட்டார்சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

லார்கின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (BBP) அதிகாரி வான் அஸ்ரி வான் அடன்னான் கூறுகையில், “அவசர அழைப்பு இரவு 11.13 மணிக்கு வந்தது. எங்கள் குழு 7 நிமிடங்களில் சம்பவ இடத்தை சென்றடைந்தது,” என்றார்.

தீயால் கடையின் 50% பகுதி முற்றிலும் சேதமடைந்தது. தீயணைப்பு வீரர்கள் இரண்டு நீர்வழி குழாய்களைப் பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தினர். “11.27 மணிக்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, 11.57 மணிக்கு முழுமையாக அணைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

ஏதும் உயிரிழப்புகள் இல்லை, விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்று அவர் கூறினார் .

இந்த தீவிபத்தில் யாரும் காயமடையவில்லையென்றும், தீ பற்றியதற்கான காரணம் மற்றும் ஏற்பட்ட நஷ்ட மதிப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் வான் அஸ்ரி தெரிவித்தார்.

தீ அதிகளவில் பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். பொதுமக்கள் தீயை அணைக்கும் வீரர்களின் செயல்பாட்டுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கடையில் இருந்த மோட்டார்சைக்கிள்கள் முற்றிலும் எரிந்ததால் உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தின் காரணம் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை, ஆனால் மின்கசிவு அல்லது கைதீண்டிய செயல்பாடுகளால் தீ பற்றியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கடையின் உரிமையாளர் தீயால் ஏற்பட்ட சேதத்தினை கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள், ஏனெனில் இது போன்ற விபத்துகள் மீண்டும் நடக்காமல் இருக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

-முல்லை மலர் பொன் மலர் சோழன்

Scroll to Top