
சிங்கப்பூர், 11 பிப்ரவரி — சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில், நள்ளிரவு 12 மணியளவில் முதல் பால்குட காணிக்கை செலுத்தப்பட்டது. ஆலயத்தின் தகவலின்படி, இதுவரை சுமார் 14,700 பால்குடங்கள் பக்தர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சுமார் 135 பக்தர்கள் காவடிக் காணிக்கையைச் செலுத்தியுள்ளனர் என்று ஆலயம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து, பால்குடங்களையும் காவடிகளையும் ஏந்தியபடி, ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்திற்குச் சென்று வருகின்றனர்.
இந்த ஆண்டும் பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று தங்கள் வேண்டுதல்களை முருகனிடம் செலுத்தி, ஆன்மிக திருப்தி அடைந்தனர்.
-பார்த்திபன் செல்வகுமார்