
Picture : Awani
கோலாலம்பூர், 31 மார்ச்: யங் டி-பெர்துவான் அகோங், சுல்தான் இப்ராஹிம் மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங், ராஜா சரித் சோஃபியா ஆகியோர், இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற ஐதில்பித்ரி விழாவில் இன்று காலை 10.30 மணிக்கு கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதமர், தத்துக் ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி, டத்தின் ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், அமைச்சரவையின் முக்கிய உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதர்கள், உயர் பதவியாளர் மற்றும் இஸ்தானா நெகாரா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, தகவல் தொடர்பு அமைச்சர், டத்துக் பஹ்மி பாஸ்தில், தேசிய தலைமை செயலாளர், தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாகர், நாடாளுமன்றத் தலைவர், தான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
மாநில ஜொகூர் உணவுகளை பிரதிபலிக்கும் வகையில், காசாங்க் பூல், லக்சா ஜொகூர், மீ ரெபுஸ் ஜொகூர் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன. கூடுதலாக, லேமாங், கெடுபாட், ரெண்டாங் மற்றும் நாசி பரியாணி போன்ற பாரம்பரிய உணவுகளும் விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்டன.
இந்த ஆண்டு ஐதில்பித்ரி விழா, 2024ல் சுல்தான் இப்ராஹிம் யங் டி-பெர்துவான் அகோங் ஆக பதவியேற்றதிற்குப் பிறகு இரண்டாவது முறையாக நடைபெறுகிறது.
நிகழ்வின் நிறைவில், ராஜகுடும்பத்தினர் மக்களுடன் நேரடியாக சந்தித்து, அவர்களுடன் உரையாடினர்.
முன்னதாக, சுல்தான் இப்ராஹிம் மற்றும் ராஜா சரித் சோஃபியா, மஸ்ஜித் விலாயா பெர்சேகுடுவான் மசூதியில் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.
–முல்லை மலர் பொன் மலர் சோழன்